1. உங்கள் கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டியவுடன் கரையான் எதிர்ப்பு மருந்து(eco friendly) விட்டு நனைக்க பட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருந்து உங்கள் நிலத்தடி நீரை விஷமாக்கும் தன்மையற்றதா..?என கேட்டு அறிந்து பின் பயன் படுத்த அனுமதிக்கவும்.குறைந்த விலையில் வாங்குவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை தெளிக்கும் போது கொடிய வாசனையையும்,சுவாசித்தால் மயக்கமும்,தெளித்த பின் நிலத்தடி நீருக்கு கெடுதலும் விளைவிக்கும்.2. கரையான் எதிர்ப்பு மருந்து அஸ்திவாரம் தோண்டியவுடன் அதன் எல்லா பக்க சுவர்களிலும்,தளத்திலும் அடிக்க பட வேண்டும்,பின் அஸ்திவாரம் கட்டியவுடன் அதில் மண் நிரப்பி நீர் விடும்போதும் அந்த நீருடன் மருந்து கலவையை கலக்க வேண்டும்.பின் வீட்டுக்கு எடுக்கும் மர ஜன்னகள்,கதவுகள்,அலங்கார அடுக்குகளுக்கும் அடிக்க வேண்டும்.

3.உங்கள் கட்டிடம் கட்டும்போது முதல் மாடியில் குளியலறை கட்டும் முன் அதன் பள்ளமான (sunken) பகுதிக்கு வாட்டர் புரூப் கோட்டிங் அடிக்க பட வேண்டும்.பின் அதில் 1" வாட்டம் கொடுத்து எல்லீஸ் கான்க்ரீட் இட்டு அதன் இறுதியில் நீர் வடிந்து செல்ல 1" pvc பைப் வைக்க வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் ஏதேனும் நீர் கசிவு ஏற்படும்போது அது இந்த பைப் வழியே வடிந்து வெளியே சென்று விடும்,மேலும் கட்டிட கான்க்ரீட் பாதுகாப்பாக இருக்கும்.

4 . Elevation ரூப் அல்லது taper ரூபிங் செய்து அதில் சிவப்பு ஓடு பதிக்கும் எண்ணம் இருந்தால் அந்த இடம் கண்டிப்பாக வாட்டர் புரூப் கோட்டிங் அடிக்க பட வேண்டும். மேலும் ஒவ்வொரு ஓடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை வாட்டர் புரூப் பவுடர் கொண்டு அடைக்க வேண்டும்.
5 .மொட்டை மாடி தளத்தில் 150 சதுர அடிக்கு ஒரு நீர் வடிகால் பைப் வைக்க வேண்டும் (4" பைப்). கான்க்ரீட் இடும் போதும்,தளம் பூச்சு பூசும் போதும் வாட்டர் புரூப் ஆயில் கலவை சிமெண்ட் கான்க்ரீட்டில் கலக்க பட வேண்டும். மேலும் fibre Admixture இதனுடன் கலந்தால் மேல் தளத்தில் விரிசல்கள் வரும்காலத்தில் ஏற்படாது.
6 . பாத்ரூம் டைல்ஸ் ஜாயிண்டுகள் எபோக்சி பவுடர் மூலம் அடைக்க பட வேண்டும்.
7 .மேல் நிலை நீர் தொட்டி கண்டிப்பாக வாட்டர் புரூப் கோட்டிங் அடிக்க பட வேண்டும்.
8 .பீம் மற்றும் காலம் போஸ்டுகளில் ஏற்படும் சிறு துளைகளை மைக்ரோ கான்க்ரீட் மூலம் அடைக்க பட வேண்டும்.
9 .மேல் தளம் (terrace floor ) நீர் விட்டு curing செய்த பிறகு வேம்பநாட் அல்லது கோட்டயம் சிமெண்ட் பூச்சு அடிக்க பட வேண்டும்.
10 . பெயிண்டிங் செய்யும் போது சுவர்களுக்கு கண்டிப்பாக Exterior emulsion பெயிண்ட் அடிக்க பட வேண்டும்.