கான்கிரீட் பழுதா...? பாத்ரூம் கசிவா..? நீர்த்தொட்டி கசிவா?
ஆகவே கட்டிடங்களை பராமரிக்க இதோ சில எளிய வழி முறைகள்..
- மழைக்கு முன்பு நீர் வடிகால் குழாய்களில் அடைப்பு மற்றும் மாடிகளில் (terrace ) தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் போடப்பட்டிருக்கும் "மரம் மற்றும் வேண்டாத பொருட்களை" அப்புறபடுத்தவும்.
- சன் சேட்(sun shade ),மேல்கூரை (terrace ),போர்டிகோ போன்றவற்றில் இருக்கும் நீர் வடிகால் குழாய்கள் சிறியதாக இருப்பின் பெரிதாக மாற்றி பதிக்கவும்.
- கட்டிடம் கட்டியவுடன் சுவர் பூச்சுக்கு மற்றும் மேல்தளத்திற்கு மேல் வேம்பநாடு கோட்டயம் சிமெண்ட் பெயிண்ட் செய்யவும்.இதனால் பூச்சில் இருக்கும் சிறு சிறு துளைகளும் அடைபடும். அதற்க்கு மேல் exterior emulsion பெயிண்ட் primer அடித்து பின் இரு முறை அடிக்கவும்.
- ஒவ்வொரு 5 வருட இடைவேளையிலும் மீண்டும் பெய்ண்டிங் செய்யவும். Exterior emulsion ஒரு கோட் மட்டும்.
- பாத்ரூம் முதல் தளத்தில் அமைக்க வேண்டி இருந்தால் sunken கான்கிரீட்டில் நீர் தடுப்பு பூச்சு (waterproof coating ) செய்வது அவசியம்.இதனால் பின்னர் ஏற்படும் பாத்ரூம் கசிவு மற்றும் ஓதத்தில் இருந்து காத்து கொள்ளலாம்.
- கட்டிடம் கட்டி இரு வருடங்களில் சுவர்களில் ஏற்படும் சிறு சிறு விரிசல்களை அக்ரிலிக் கிராக் பில்லர் (Acrylic crack filler) மூலம் பட்டி பார்த்து சரி செய்து பெயின்ட் செய்யவும்.
- பாத்ரூம் டையில்ஸ் ஜாயின்ட்களில்(tiles joints ) சாதாரண ஜாயின்ட் பவுடர் மூலம் பேக் செய்யாமல் எபோக்சி ஜாயின்ட் பில்லர் மூலம் பேக் செய்யவும்.
- பழைய கட்டிடத்தில் இருந்து புது கட்டிடம் எழுப்பும் போது ஏற்படும் ஜாயின்ட் விரிசலை தவிர்க்க Waterproof expert -ஐ அணுகி அதற்குண்டான கெமிகளை பயன்படுத்தவும்.
- ஏற்கனவே உண்டான மேல்தள விரிசல்களை சீலன்ட்(poly sulphide sealant ) மூலம் அடைக்கவும்.
- கட்டிட elevation அழகுக்காக போடபட்டிருக்கும் சிவப்பு நிற ஓடுகளின் ஜாயின்ட்கள் சரிவர அடைக்க பட்டிருகிறதா என மழைக்கு முன்பே பரிசோதிக்கவும். மேலும் ஒவ்வொரு முறை சுவர் பெயிண்டிங் செய்யும் போதும் அந்த ஓடுகளின் மேல் exterior emulsion பெயின்ட் செய்யவும்.
- கட்டிடம் கட்டும்போதே குறைந்தபட்சம் 150 சதுர அடிக்கு ஒரு நீர் வடிகால் குழாய்கள் இருக்கும்படி அமைக்கவும்.
- ஜன்னல் மற்றும் கதவு பிரேம்களில் ஏற்படும் விரிசல்களை சிலிகான் சீலன்ட் கொண்டு அடைக்கவும்.
- மேல்நிலை நீர்த்தொட்டி கசிவுகளை waterproof expert மூலம் சரி செய்யவும்.
- அஸ்திவாரத்தை ஒட்டி நீர் வடிகால் குழாய்கள் மூலம் நீர் வடிவத்தை மாற்றி அமைக்கவும்.
Standard systems .coimbatore .
09894731460
அருமையான பகிர்வு.பால்கனி வரும் பகுதியில் பாத்ரூம் அமைக்கலாமா?)கீழே பில்லர் ஏதும் இல்லாமல்)
ReplyDeleteபால்கனியில் பாத்ரூம் அமைக்கும் முன்பு அதன் கீழ் பரப்பு வாட்டர் ப்ரூபிங் செய்வது அவசியம் மேலும் அதற்கு தாங்குதிறன்(structural strength ) எப்படி உள்ளது எனவும் பரிசோதிக்க வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு அலைபேசிக்கு அழைக்கவும். நன்றி உங்கள் கேள்விகளுக்கு.
ReplyDelete