U R CUSTOMER NUMBER..

Monday, November 14, 2011

கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுவது ஏன்...?





* கட்டிடங்களில் விடும் "நீர் உப்புத்தன்மை" நிறைந்ததாக இருந்தாலும்..
*கட்டிடங்களுக்கு விடும் நீரின் அளவு அதிகமானாலும், குறைந்துபோனாலும்..(குறைந்தபட்சம் 13 நாட்கள் க்யுரிங் போதுமானது)
*சிமெண்ட், மணல்  கலவை சரிவர திருப்பபடாமல் இருந்தாலும்...,(நீர் விடாமல் 3 முறையும், நீர் விட்டு 2 முறையும் திருப்பபடவேண்டும்.)
*பூச்சுக்கு தகுந்த "சிமெண்ட் கிரேட்" பயன்படுத்தாமை...
*லோடிங் சப்போர்ட் சரிவர கொடுக்கபடாதாலும்...(structural support)
*தரம் குறைந்த சிமெண்ட் உபயோகித்தாலும்,  
*நீர் உறிஞ்சும் தன்மையில் பூச்சு இருந்தால்,
*மழைகால நீர் வடிகால் சரிவர கொடுக்கபடததாலும், போதுமான நீர்வடி குழாய்கள் அமைக்க படாததாலும்..
*பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடம் இணைக்கப்படும்போது அங்கே அதற்க்கான பாண்டிங் கெமிகல் பயன்படுத்தாமை,
*கட்டிடத்தில் இயல்பாக ஏற்படும் பில்டிங் expansion joint விரிசல்கள்...  
*கான்க்ரீட் கம்பிகள் நீர் கசிவினால்  துரு பிடித்து கட்டிட மேல்கூரை விரிசல் விடுதல்,
*காலநிலையும், காற்றில் உள்ள ஈர பதமும் ...
*கட்டிட புறசுவர்கள் நீர் தடுப்பு பெயிண்டிங் செய்ய படாமை...

போன்றவைகள் முக்கிய காரணங்கள் கட்டிடங்களில் விரிசல் விட...?!

Monday, July 11, 2011

கட்டிடங்களில் ஓதமா..? நீர்கசிவா..?

கட்டிடங்களின் மேற்கூரையில்(ceiling) இருந்து ஓதமோ, நீர்கசிவோ இருந்தால் செய்யவேண்டியவை :
1.உங்கள் கட்டிடத்தின் மேல்தளம் (terrace) மழைகாலங்களில் நீர் தேங்கும்படி வாட்டம் இல்லாமல் இருக்கிறதா...?என பரிசோதிக்கவும்.

2.கட்டிடத்தின் மேல்தளத்தில் விரிசல்களோ,நீர்தங்கி பாசனம் பிடித்து இருந்தாலோ, நீர் வடி குழாய் சிறிதாகவோ,
தளம் மணல் மணலாய் பொறிந்து வந்தாலோ...
அதை தகுந்த வாட்டர்ப்ரூப் நிபுணர் கொண்டு சரி செய்ய வேண்டும்.

3.கட்டிடம் கட்டியவுடன் குறைந்தபட்ச பராமரிப்பாக நீங்களே மேல்தளத்தை பாசனம் சுத்தம் செய்து,கோட்டயம் வேம்பநாட் சிமெண்ட் மேல்தளத்தில் முழுவதும் பூசி விடலாம்.


4.மேல்தளம் பாளம் பாளமாக 
உடைந்து போயிருந்தாலோ, வீட்டில் மேல்கூரை(ceiling) உடைந்து கம்பிகள் தெரியும்படி இருந்தாலோ...உடனே வாட்டர்ப்ரூப் நிபுணர் மூலம் துரு பிடத்த கம்பிகளுக்கு மீண்டும் துரு பிடிக்காத வகையில் (NITOZINC PRIMER)  அடித்தும்,பழைய உடைந்த சிமெண்ட் பூச்சில் பாண்டிங் கெமிக்கல்(bonding chemical ) சிமெண்ட் பாலில் ஊற்றி உடைந்த இடத்தி அடித்தும்,கலக்கும் கலவையிலும் கலந்து பேட்ச் வர்க் வேலைகள் செய்ய வேண்டியது அவசியம்.   

Tuesday, February 22, 2011

புதிதாய் கட்டிடம் கட்டுவோர் கவனத்திற்கு...



1. உங்கள் கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டியவுடன் கரையான் எதிர்ப்பு மருந்து(eco friendly) விட்டு நனைக்க பட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருந்து உங்கள் நிலத்தடி நீரை விஷமாக்கும் தன்மையற்றதா..?என கேட்டு அறிந்து பின் பயன் படுத்த அனுமதிக்கவும்.குறைந்த விலையில் வாங்குவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை தெளிக்கும் போது கொடிய வாசனையையும்,சுவாசித்தால் மயக்கமும்,தெளித்த பின் நிலத்தடி நீருக்கு கெடுதலும் விளைவிக்கும்.

2.  கரையான் எதிர்ப்பு மருந்து அஸ்திவாரம் தோண்டியவுடன் அதன் எல்லா பக்க சுவர்களிலும்,தளத்திலும் அடிக்க பட வேண்டும்,பின் அஸ்திவாரம் கட்டியவுடன் அதில் மண் நிரப்பி நீர் விடும்போதும் அந்த நீருடன் மருந்து கலவையை கலக்க வேண்டும்.பின் வீட்டுக்கு எடுக்கும் மர ஜன்னகள்,கதவுகள்,அலங்கார அடுக்குகளுக்கும் அடிக்க வேண்டும்.


3.உங்கள் கட்டிடம் கட்டும்போது முதல் மாடியில் குளியலறை கட்டும் முன் அதன் பள்ளமான (sunken) பகுதிக்கு வாட்டர் புரூப் கோட்டிங் அடிக்க பட வேண்டும்.பின் அதில் 1" வாட்டம் கொடுத்து எல்லீஸ் கான்க்ரீட் இட்டு அதன் இறுதியில் நீர் வடிந்து செல்ல 1" pvc பைப் வைக்க வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் ஏதேனும் நீர் கசிவு ஏற்படும்போது அது இந்த பைப் வழியே வடிந்து வெளியே சென்று விடும்,மேலும் கட்டிட கான்க்ரீட் பாதுகாப்பாக இருக்கும்.


4 . Elevation ரூப் அல்லது taper ரூபிங் செய்து அதில் சிவப்பு ஓடு பதிக்கும் எண்ணம் இருந்தால் அந்த இடம் கண்டிப்பாக வாட்டர் புரூப் கோட்டிங் அடிக்க பட வேண்டும். மேலும் ஒவ்வொரு ஓடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை வாட்டர் புரூப் பவுடர் கொண்டு அடைக்க வேண்டும்.

5 .மொட்டை மாடி தளத்தில் 150 சதுர அடிக்கு ஒரு நீர் வடிகால் பைப் வைக்க வேண்டும் (4" பைப்). கான்க்ரீட் இடும் போதும்,தளம் பூச்சு பூசும் போதும் வாட்டர் புரூப் ஆயில் கலவை சிமெண்ட் கான்க்ரீட்டில் கலக்க பட வேண்டும். மேலும் fibre Admixture இதனுடன் கலந்தால் மேல் தளத்தில் விரிசல்கள் வரும்காலத்தில் ஏற்படாது.

6 . பாத்ரூம் டைல்ஸ் ஜாயிண்டுகள் எபோக்சி பவுடர் மூலம் அடைக்க பட வேண்டும்.

7 .மேல் நிலை நீர் தொட்டி கண்டிப்பாக  வாட்டர் புரூப் கோட்டிங் அடிக்க பட வேண்டும்.

8 .பீம் மற்றும் காலம் போஸ்டுகளில் ஏற்படும் சிறு துளைகளை மைக்ரோ கான்க்ரீட் மூலம் அடைக்க பட வேண்டும்.

9 .மேல் தளம் (terrace floor ) நீர் விட்டு curing செய்த பிறகு வேம்பநாட் அல்லது கோட்டயம் சிமெண்ட் பூச்சு அடிக்க பட வேண்டும்.

10 . பெயிண்டிங் செய்யும் போது சுவர்களுக்கு கண்டிப்பாக Exterior emulsion பெயிண்ட் அடிக்க பட வேண்டும்.