U R CUSTOMER NUMBER..

Monday, July 11, 2011

கட்டிடங்களில் ஓதமா..? நீர்கசிவா..?

கட்டிடங்களின் மேற்கூரையில்(ceiling) இருந்து ஓதமோ, நீர்கசிவோ இருந்தால் செய்யவேண்டியவை :
1.உங்கள் கட்டிடத்தின் மேல்தளம் (terrace) மழைகாலங்களில் நீர் தேங்கும்படி வாட்டம் இல்லாமல் இருக்கிறதா...?என பரிசோதிக்கவும்.

2.கட்டிடத்தின் மேல்தளத்தில் விரிசல்களோ,நீர்தங்கி பாசனம் பிடித்து இருந்தாலோ, நீர் வடி குழாய் சிறிதாகவோ,
தளம் மணல் மணலாய் பொறிந்து வந்தாலோ...
அதை தகுந்த வாட்டர்ப்ரூப் நிபுணர் கொண்டு சரி செய்ய வேண்டும்.

3.கட்டிடம் கட்டியவுடன் குறைந்தபட்ச பராமரிப்பாக நீங்களே மேல்தளத்தை பாசனம் சுத்தம் செய்து,கோட்டயம் வேம்பநாட் சிமெண்ட் மேல்தளத்தில் முழுவதும் பூசி விடலாம்.


4.மேல்தளம் பாளம் பாளமாக 
உடைந்து போயிருந்தாலோ, வீட்டில் மேல்கூரை(ceiling) உடைந்து கம்பிகள் தெரியும்படி இருந்தாலோ...உடனே வாட்டர்ப்ரூப் நிபுணர் மூலம் துரு பிடத்த கம்பிகளுக்கு மீண்டும் துரு பிடிக்காத வகையில் (NITOZINC PRIMER)  அடித்தும்,பழைய உடைந்த சிமெண்ட் பூச்சில் பாண்டிங் கெமிக்கல்(bonding chemical ) சிமெண்ட் பாலில் ஊற்றி உடைந்த இடத்தி அடித்தும்,கலக்கும் கலவையிலும் கலந்து பேட்ச் வர்க் வேலைகள் செய்ய வேண்டியது அவசியம்.   

No comments:

Post a Comment